• peraiyurtemple@gmail.com
  • +91 9894730410
  • Peraiyur village, Pudukkottai District

About Us

ஓம் நம சிவாய

ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் - வரலாறு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் அமைந்த ஒரு ஊர் பேரையூர். இதற்கு பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சரம், பூகிரி, பூசண்டகிரி, ஷெண்பகவனம் என்று பல பெயர்கள் உண்டு. சிவனின் திருமணத்தின்போது அகத்தியர் தெற்கே வந்தார். அப்போது தான் கண்ட தலத்தின் சிறப்பை கௌதமரிடம் சொன்னார். அதை, வியாசமுனிவர் வடமொழியில், ‘சூத சங்கிதை’ என்ற பெயரில் எழுதினார். சுவாயம்பு மனு மரபில் உதித்த பாண்டிய மன்னன், சுவேதகேது. வடநாட்டில் பலதிருத்தலங்களை வழிபட்டு, காசியில் கங்கை நீராடி விஸ்வநாதரை வழிபட்டான்.

அவன் பக்தியைக் கண்ட கங்காதேவி அவனுக்கு காட்சி கொடுத்து, வேண்டும் வரம் ஏதெனக் கேட்டாள். தினமும் சிவபூஜை செய்வதற்கு ஏற்ப கங்கை நதி தன் நாட்டில் பாய வேண்டும் என வேண்டினான். அதன்படி கங்கையும் ஒரு சிறுபெண்ணாக அவன் தோளில் அமர்ந்து வந்தாள். வழியில் பாய்ந்து வரும் காவிரியைக் கண்டதும், தோளிலிருந்து குதித்தோடி காவிரியுடன் கலந்தாள் கங்கை. சுவேதகேது பேரையூர் சென்று இறைவனிடம் முறையிட, சிவபெருமானும், ‘உன் பெயரால் இங்கு கங்கை, சுவேத நதியாகப் பாயும்,’ என்று அருளினார்.

உலகை அழகு மிக்கதாக பல்வகைச் சிறப்புகளுடன் படைக்க நினைத்த பிரம்மா, புனித தீர்த்தமாகிய சிவகங்கையை கோயிலின் முன்புறத்தில் உருவாக்கினார். அதில் நீராடி, பேரையூர் ஈசனை வழிபட்டு, விஸ்வகர்மாக்களைப் படைத்தார். விஸ்வகர்மாக்களால் இந்த உலகம் வலிமையும் அழகும் மிக்கதாக ஆனது. பிரம்மனுக்கு கிருதயுகத்தில் படைப்பின் பேராற்றலைத் தந்தது பேரையூர் திருத்தலம்

பேரையூர் திருக்கோயிலின் உள்ளே தென்புறத்தில் ஓர் இயற்கை சுனை, புண்ணிய புஷ்கரணி, பொன்முகரி ஆகிய பெயர்களுடன் விளங்குகிறது. அதன் தென்கோடியில் பிரம்மாவும், விஷ்ணுவும் வந்து நீராடியதாக வரலாறு உண்டு. இத்தீர்த்தத்தின் பெயரை நினைத்தாலும், சொன்னாலும், பார்த்தாலும், தொட்டுப் பூசித்தாலும், சிவபதவி அடைவர் என தலபுராணம் கூறுகிறது பதினெட்டு நாடுகளின் அரசன் சாலேந்திரன், சிவதீக்ஷை பெற்றவன். தினமும் சிவபூஜை செய்பவன். ஒருநாள் சிவபூஜை செய்யும்போது ஒரு நாககன்னியைக் கண்டு மையல் கொண்டான்.

அவள் நினைவால் சிவபூஜை செய்யும்போது கவனக்குறைவால், வண்டு துளைத்த ஒரு மலரால் பூஜை செய்தான். அரன் அவனை நாகலோகத்தில் பிறந்து, நாக கன்னிகையை மணந்து வாழ்ந்து சிவபூஜை செய்து தன்னை வந்தடைய அருளினார். அதன்படி சாலேந்திரன் நாகலோகத்தில் நாகராசனுக்கு குமுதன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்து நாககன்னிகையை மணந்து சிவபூஜை செய்து வந்தான்.

தினமும் ஏழு நாககன்னிகளை பூலோகத்திற்கு அனுப்பி சிவபூஜைக்காக மணம் மிக்க மலர்களை பறித்துவரக் கூறியிருந்தான். அவர்கள் பேரையூர் திருக்கோயில் சுனையின் பிலத்துவாரத்தின் வழியாக வெளிவந்து இறைவனை வணங்கி கோயிலின் ெசண்பக வனத்திலிருந்து மணம்மிக்க மலர்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். ஒருநாள், பூப்பறிக்க வந்த நாககன்னிகையிடம் பேரையூர் பெருமான், நாகராசனை அழைத்துவரச் சொன்னார். தன் மன்னன் வரவேண்டுமென்றால், யாராவது ஒருவரை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்று கோரினாள்.

இறைவன் நந்தி தேவரை அனுப்பினார். இறைவனின் கட்டளைப்படி வந்து பேரையூர் பெருமானை வழிபட்டான். இறைவன், அவன் வேண்டும் வரம் என்னவென்று கேட்க, நாகராசனோ, ‘நான் சிவபூஜை செய்யும்போது தேவர்கள் துந்துபி இசைக்க, நீங்கள் நர்த்தனம் புரியவேண்டும்’ என வேண்டினான். அதன்படி நர்த்தனம் நடக்க, அந்த இசை பிலத்துவாரத்தின் வழியாக சுனை, கோயில், ஊர், உலகம் என அனைவருக்கும் கேட்க, முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதல் அனைவரும் மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். நாகராஜனுக்காக நமச்சிவாயன் நர்த்தனம் ஆடியதால் பேரையூரில் உறையும் தன் பெயரும் இனி நாகநாதன் என வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்திரன் அகலிகையைப் பெண்டாளத் துணிந்ததால் கவுதமர் சாபமிட்டார். அகலிகையைக் கல்லாக மாற, இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகத் தோன்றியது. அவனுடைய வஜ்ஜிராயுதமும் தொலைந்தது. மனம் நொந்த தேவேந்திரன் பேரையூர் வந்து வெள்ளாறு, சிவகங்கை, புண்ணிய புஷ்கரணி சுனை ஆகியவற்றில் நீராடி பேரையூர் பெம்மானிடம் வேண்ட வஜ்ஜிராயுதத்தை மீண்டும் தந்தருளினார் ஈசன்.

முதன்முதலாக சுனையில் ஒலிகேட்ட நாள், தண்டமிழ்ப் புத்தாண்டாம் சித்திரை முதல் தேதியாகும். ஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியன் உச்சத்தில் சஞ்சரிக்கும்போது, நாகராஜனுக்காக பேரையூர் ஈசன் நாகலோகம் சென்று அவனது பூஜையை ஏற்று அவனுக்காகத் திருநடனம் புரிகின்றார். அவ்வொலி பிலத்துவாரத்தின் வழியாக பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தமாக எழுகிறது. இன்றளவும் பங்குனி மாதம் இறுதி அல்லது சித்திரை மாதத்தின் முதல்நாள் இந்த நாகலோக நடன ஒலி கேட்பது ஆன்மிக விந்தை ஆகும்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வந்து சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. சிவ அபசாரம் செய்த தந்தையின் காலைத் துண்டித்த விசார சர்மனை, அரன் கயிலைக்கு அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய பிதுர் துரோக பாவம் அகல, பேரையூர் சென்று வழிபட்டு பாபவிமோசனம் பெற்றான்.
கிராதன் என்ற வேடன், ஒருநாள் காட்டில் யாரிடமாவது கொள்ளையடிக்கக் காத்திருந்தபோது ஒரு முனிவர் எதிர்ப்பட, அவரிடம் இருக்கும் பொருளைத் திருட முற்பட்டான். அவரோ தான் பேரையூர் பெருமானை தரிசனம் செய்வதற்காகச் சென்றுகொண்டு இருப்பதாகவும் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லை என்றும் கூறினார். பேரையூர் என்ற பெயரைக் கேட்டதுமே அவன் சித்தம் தெளிந்து ஞானியானான்; பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் பெற்றான். அவனும் பேரையூர் வந்தான், அரனை வணங்கும் முறைகளை அவன் அறிந்திருக்கவில்லை.

அதனால் காட்டிலிருந்து கொண்டுவந்த மூட்டையில் இருந்த சாம்பிராணியைத் தீயில் தூவி கோயில் முழுவதும் மணம்பரப்பி, கோயிலின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வந்து விழுந்து வணங்கினான். ஈசன் காட்சி தந்து அவனையும் ஆட்கொண்டார். அது முதல் பேரையூர் ஈசனுக்கு சாம்பிராணி போடும் வழிபாடும் துவங்கியது. அதனால் நாகலோக நடன ஒலி நாளிலும் சாம்பிராணி வழிபாடு உண்டு.
அனைத்து உயிர்களையும் சரியாக வழிநடத்தும் இறைவன் பேரையூர் நாகநாதசுவாமி ஆவார்

இந்த கோயிலின் மிகப்பழமையான பகுதி, மேற்கு கோபுரத்தை சன்னதிக்கு பின்னால் உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டில் உள்ளது மற்றும் சோழ பாணியில் செய்யப்படுகிறது. இந்தக் கோட்டையின் தனித்துவமான சோழ கட்டிடக்கலை அம்சங்களும், சப்தா-மட்ரிகா குழுவினருடன் ஒற்றை கல் மீது நிவாரணம் மற்றும் ராஜேந்திரா-சோஸ்சா I (1012-44) என்ற ஒரு கல்வெட்டு, கோவில் முதலில் 10 ஆம் நூற்றாண்டின் சோழ அமைப்பு, ஆனால் பின்னர் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான மற்ற சோழ மற்றும் பாண்டிய கல்வெட்டுகள் உள்ளன.

நாகநாத சுவாமியின் தற்போதைய கர்ப்பகிருகம் 12 -13 ஆம் நூற்றாண்டின் பாண்டிய கட்டமைப்பாகும். இது மேல் ஒரு vyala-vari மற்றும் நடுத்தர ஒரு வளைந்த kumudam ஒரு தடவப்பட்ட பீடம் நிற்கிறது. பைலஸ்டர்கள் செவ்வக அடித்தளத்தோடு அடுக்கான அடுக்காக இருப்பார்கள், ஆனால் நாகபதம்-கள் இல்லாமல். பல்லகாய் பெரிய மற்றும் சதுரமாக உள்ளது, மேலும் பேட்மேம்கள் நன்கு வரையறுக்கப்பட்ட இதழ்கள் உள்ளன. சுவரில் ஐயப்பள்ளிகள் உள்ளன, தக்ஷிணா-மோர்த்தி, லிங்கோட்-பஹா மற்றும் பிரம்மாவின் படங்கள் உள்ளன. வைமானம் ஒரு நவீன செங்கல் கட்டுமானமாகும்.

பிரம்மதபாலின் துணை மண்டபங்கள் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது விஜயநகர கட்டிடக்கலை பாணியில் உள்ளது.

கிழக்கு பிரதான கோபுரம் பாண்டிய கட்டமைப்பாகும், ஆனால் மேலே செங்கல் நவீனமானது. பிரகாரத்தில் மற்ற மண்டபங்கள் நவீனவை. இந்த கோவில் புதுப்பிப்புகளை கொண்டுள்ளது, இது கடைசியாக ராமச்சந்திர தொண்டமானின் (1834-1886) ஆட்சியின் போது நடந்தது.

இங்கு நாம் "நாகப்ரதிஷ்டை & நாகப்பரிகாரம்" செய்வோம்


மேலும் தகவல் தெரிந்து கொள்ள

தொடர்புக்கு